முகப்பு

நாகரீகமயமான இன்றைய சூழலின் இறையாண்மை மிக்க தமிழர் தேசிய இனத்தின் வரலாற்றுப் பதிவுகள், பண்பாட்டு அடையாளங்கள், நாகரீக வளர்ச்சிகள், தொன்ம மரபுகள் எனத் தமிழர் அடையாளங்கள் அனைத்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டும் ஆக்கிரமிப்பாளர்களால் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழர் அடையாளங்களை அழிவில் இருந்து காக்கவும், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும் அரசியல் முன்னெடுப்புகளோடு ஊடக முன்னெடுப்பும் அவசியமாகிறது. இதன் தேவை உணர்ந்தே இந்த மாத இதழ் உருவாக்கப்பட்டது. இந்த இதழ் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் திருப்பூரில் நடந்த கிராம பூசாரிகள் மாநாட்டில் மேன்மைக்கு உரிய ஊடகவியலாளர் முனைவர் ஜக்மோகன் சிங் அவர்கள் வெளியிட, நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் சட்டத்தரணி தடா சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். இந்த இதழ் தமிழர் மெய்யியல், தமிழர் அரசியல், தமிழர் பண்பாடு, கலை இலக்கியம் மற்றும் சூடான அரசியல் நிகழ்வுகள் இவைகளை தங்கி வந்துகொண்டு இருக்கிறது