ஈரோட்டு ராமசாமியும், தமிழினத் துரோகமும் வெவ்வேறல்ல…!

ஈரோட்டு ராமசாமியும், தமிழினத் துரோகமும் வெவ்வேறல்ல

தமிழகம் பிறந்த நாளாகிய நவம்பர் மாதக்கட்டுரையாக எழுத்தாளர் திருமாவேலனின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இதுநாள் வரை தமிழருக்கு மத்தியில் திராவிட கருத்தியலை முன்வைத்து தமிழர்களை ஏமாற்றிப் போன பெரியாரே நேரில்வந்து உண்மையை ஒத்துக்கொண்டாலும் இவளவு நேர்மையாக ஒத்துக்கொண்டிருக்க மாட்டார். தனது கட்டுரை முழுவதும் அருமையாக, பெரியாரின் பெருமையாக தமிழர்களுக்கு எதிராக அவர் ஆற்றிய களப்பணியை பட்டியலிட்டு இருந்தார். பாவம் திருமாவேலனுக்கு திராவிட சித்தாந்தத்தின் மீதும், பெரியார் மீதும் என்ன கோபமோ தெரியவில்லை. வெளுத்து வாங்கியுள்ளார். அவரின் நடுநிலைமையை எப்படியாவது நம்பவைக்க வேண்டும் என்று திராவிட சித்தனை எதிராளிகளை குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று ஒப்புமை செய்யும் அந்தக் கட்டுரையை குறையாகவே பிரசவித்து விட்டார் என்பது படிப்பவர்களுக்கு தெரியும்.

 மொழிவாரி மாநில எல்லை பிரிப்பில் பெரியார் என்ன செய்தார் என்று கட்டுரை முடியும்வரை சொல்லாததே அந்தக் கட்டுரையின் பலம். ஏனெனில்  அப்படி எதுவுமே பெரியார் செய்யவில்லை என்பதும், தமிழக எல்லை பிரிப்பில் தமிழருக்குத் துரோகமே பெரியார் செய்துள்ளார் என்பதுவும் எல்லோரும் அறிந்த ஒன்று. சரி நாம் இந்தக் கட்டுரை விவாதத்திற்கு வருவோம். பெரியார் யார் ? அவர் இந்த இனத்திற்கு என்ன செய்தார் ? அவர் செய்ததின் பின் விளைவுகள் என்ன ? இதையெல்லாம் இப்போது அசைபோட வேண்டிய அவசியம் இருக்கிறது. பெரியார் ஒரு கடந்து போன சூனியக்கார புத்தகம், அதை மறுவாசிப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும், பெரியாரை பிழைப்புவாத அரசியலுக்காகத் தலையில் தூக்கிக் கொண்டாடும் பெரியாரிய பக்தர்களுக்காக இல்லாவிட்டாலும், தமிழ்த்தேசிய பாதையில் பயணித்த போதிலும் பெரியாரை விமர்சிக்க, கட்டுடைக்கத் தயங்கும் சிலருக்காவது இந்த புரிதலை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் இனத்தைத் திட்டமிட்டு ஏமாற்றியவர் ஒருவர் என்றால், அந்த இனத்தின் தொன்ம அடையாளங்களைத் திட்டமிட்டு சிதைத்தார் ஒருவர் என்றால், இந்த இனத்தை தங்களது சுயநிர்ணய உரிமைகளைப் பற்றி சிந்திக்கவே விடாமல் வைத்தார் ஒருவர் என்றால், ஒரு தொன்மைவாய்ந்த தொல்குடி மக்களின் பெருமைகளை அந்த மக்களை வைத்தே சிதைத்தார் ஒருவர் என்றால்… அவர்தான் பெரியார்.

periyar_veeramani

பகுத்தறிவு, நீதிக்கட்சி, திராவிடம், தீண்டாமை, சாதி ஒழிப்பு, பெண்ணிய விடுதலை, சமூக நீதி என எத்தனையோ பசப்பு வார்த்தைகளை இந்த மண்ணில் விதைத்து தனது உள்நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்ட ஒருவர் என்றால் அவர்தான் பெரியார். ஆசீவகம் கண்ட மறக்களி கோசானார் பேசாத ஊழ்வினை மறுப்பு கடவுள் மறுப்பு தத்துவம் இல்லை, ஐயா வைகுந்தர் செய்யாத சமூக சீர்திருத்தம் இல்லை, தமிழ் பெருமகன் வள்ளலார் செய்யாத பிராமண எதிர்ப்பு இல்லை, ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் இவர்கள் செய்யாத சாதி ஒழிப்பு இல்லை. ஆனால் இவர்கள் அனைவரையும் மறைத்து எல்லாவகையான சமூக நீதிக்கும் தானே தளகர்த்தராகத் தன்னை தானே அறிவித்துக்கொண்டு, தமிழினத்தைத் திட்டமிட்டு ஏமாற்றியவர் ஒருவர் என்றால் அவர்தான் ஈரோட்டு ராமசாமி…

 “திராவிடம்” என்ற சொல்லாடலே வெள்ளைக்கார அரசாங்கத்தின் இறக்குமதி. இந்த மண்ணை வெள்ளையர்கள் ஆண்டபோது இந்தியாவில் வாழும் மனித குழுக்களை வகைப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது பிராமணர்களை “பிராமணர்கள்” என்றும் பிராமணர் அல்லாதவர்களை கார்டுவெல்லின் ஆலோசனையின் படி “திராவிடர்” என்றும் வகைப்படுத்தியவர் விகடோரியா மகாராணி என்பார்கள். எப்படி வெள்ளைக்காரன் பெற்று போட்ட கள்ளப்பிள்ளை காங்கிரஸோ, அப்படியே விக்டோரியா மகாராணி பெயர்வைத்த கற்பனை பெயர்தான் திராவிடம் என்பது. சொல்லாய்வின் படி “திராவிடம்” என்ற பெயரே சமஸ்கிருத சொல் என்று தெரிந்தும் இந்தச் சமஸ்கிருத எதிர்ப்பு போராளிகள் திராவிடம் என்ற சொல்லை மாற்றவில்லை என்பது வெட்கக்கேடு.

 

பெரியார் எப்படி எதனால் புரட்சியாளர் ஆனார் ?

 தமிழகத்தில் வெள்ளையர்களின் வருகை விசயநகர வடுகர்களையும் அவர்களாவது ஆட்சி அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. முதலில் பிராமண ஆதிக்கத்தைச் சூதாக கைப்பற்றிய விசயநகர வாரிசுகள் தமிழர்களை போலவே பிராமணர்களையும் அடக்கி வைத்து இருந்தது. வெள்ளையர்களின் வருகைக்குப் பின் பிராமணர்கள் வெள்ளை அரசின் ஒரு குறிப்பிட்ட அதிகார மையங்களுக்கு நகர்ந்தனர். அந்தச் சூழலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த விசயநகர வடுகர்கள் பிராமணர்களின் கீழ் ஏவல் வேலை செய்பவர்களாக மாறினார். இதைப் பெரியார் மிகுந்த வேதனையோடு ஒரு இடத்தில் பதிவு செய்து உள்ளார். “வெள்ளையர்களின் ஆட்சியைவிடக் கொடுமையானது, மீசையை முறுக்கி இருந்த நாயக்கர்கள், மீசையே இல்லாத பிராமணர்களின் கீழ் வேலைசெய்யும் நிலை உருவாகிவிட்டதே என்பதே எனது வருத்தம்” எனத் தனது கட்டுரைகளில் பதிவு செய்து இருக்கிறார். இருக்காதா இந்த இனப்பாசம் அவருக்கு ?

 சூழல் இப்படி இருக்க, இந்திய சுதந்திரப்போர் மெல்ல விடுதலையை நோக்கி நகர்வதை உணர்ந்துகொண்ட பெரியார், ஒருவேளைச் சுதந்திரம் அடையும் போது அதிகார மையங்களின் உயர்ந்த இடத்தைப் பிராமணர்கள் பிடித்து விடுவார்கள். அதை எப்படியாவது தடுத்து தனது இனத்தின் விசயநகர வாரிசுகளுக்குச் செல்வாக்கு கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினால் சில வசதி படைத்த வடுகர்களை அழைத்துக் கலந்து பேசி உருவாக்கப்பட்டதே “நீதிக்கட்சி“. சரி நீதிக்கட்சியின் கொள்கை என்ன ? என்று கேட்டால் “பிராமண எதிர்ப்பு”.

அந்தப் பிராமண எதிர்ப்பும் ஒரு தத்துவ புரிதலோடு வரவில்லை. காசிக்குச் சென்ற அவருக்கு உணவு கிடைக்கவில்லை, அங்கே பிராமணர்களுக்கான தர்மசாலை ஒன்றில் நுழைகிறார். அங்கே பிராமணர்களுக்கு மட்டும் அனுமதி என்று வாசகம் உள்ளது. உடனே அவர்களை ஏமாற்ற தனக்கு தானே பூணூலை தரித்து அந்தத் தர்மசாலையில் நுழைய முற்படும்போது தனது மீசைக் காட்டி கொடுத்துவிடத் தர்மசாலையில் இருந்து வெளியேற்றப் படுகிறார். அன்றில் இருந்து பிராமணர்களை எதிர்க்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆக இவருடைய பிராமண எதிர்ப்பும் கூட வருணாசிரம தத்துவ குளறுபடியினால் வந்தது இல்லை. தனக்கு நேர்ந்த வயிற்றுப்பசி அதனை ஒட்டிய பிராமணர்களின் அவமதிப்பு இவற்றால் வந்தது. பிறகு இந்த எதிர்ப்பிற்கு பலவாறு தத்துவ நியாயங்கள் கற்பிக்கப்பட்டது என்பதே உண்மை.

periyar_kalaignar

 ஒரு இனத்தை வாழவைக்கவோ, ஒரு இனத்தைச் சமூக நிலையில் உயர்த்தவோ ஒருவன் கட்சியை தொடங்கினாள் அதற்குப் பெயர் புரட்சி… ஆனால் ஒரு  தத்துவத்தை எதிர்க்கக் கட்சி தொடங்கினாள் என்ன அர்த்தம் ? எதோ உள்நோக்கம் இறுக்கு என்றுதானே அர்த்தம். இதுதான் பெரியாரின் லட்சணம். உங்களுக்கு மேலும் இலகுவாக இந்த உள்நோக்கத்தை சொல்லவேண்டுமெனில், தனக்குச் சாகும்வரை முதல்வர் பதவி கிடைத்துவிடாது என்று உணர்ந்த வைகோ, மதிமுகவை உருவாக்கி அந்தக் கட்சியின் கொள்கையாக “திமுக எதிர்ப்பு” என்பதைப் பிரகடன படுத்த எந்த உள்நோக்கம் இருந்ததோ  அதைபோன்றதொரு உள்நோக்கமே பெரியாரின் நீதிக்கட்சி உருவாக்கத்திற்கும் இருந்தது. பிறகு காலசுழற்சியில் இந்தியா சுதந்திரம் அடைந்தது, பெரியார் நினைத்தது போலவே அதிகார மையம் பிராமணர்களுக்கு நகர்ந்தது. அரசியலில் வெல்ல முடியாது என்றுணர்ந்த பெரியார் “திராவிடர் கழகத்தை” உருவாக்கினார். அதுவும் தமிழர் கழகம் என்று உருவாக்கத் தீர்மானித்து இருந்த பெயரை மேடையில் அறிவிக்கும் நேரத்தில் சூதகமாக “திராவிடர் கழகம் என்று அறிவித்து, மேடையிலே அதற்கான விளக்கத்தைக் கொடுத்தவர்.

அண்ணாத்துரையுடன் பெரியார்
அண்ணாத்துரையுடன் பெரியார்

 சரி நாம் கட்டுரைக்கு வருவோம்…

 “ராஜாஜி ஆட்சியில் (1938) இந்தி திணிக்கப்பட்டபோது, ‘‘தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தார்” என்று திருமாவேலன் சொல்லுவது மிகுந்த நகைச்சுவைக்கு உரியது. ஏன்னெனில் 1938 இல் துவங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிக்கு பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், அப்போது தொடங்கிய அந்தப் போராட்டத்தை அவர் ஏளனம் செய்து, போராட வந்தவர்களை பஸ்ஸுக்கு காசு தருகிறேன் திரும்பிச்  செல்லுங்கள் என்று பேசியவர் பெரியார். “இந்தி எதிர்ப்பு – அன்றும் இன்றும்” என்ற ஈழத்து அடிகளும் புத்தகம் 1965 இல் வெளியானது.

 

 “இந்தி எதிர்ப்பு – அன்றும் இன்றும்” என்ற ஈழத்து அடிகளும் புத்தகம் 1965 –  பக்கம் 9

சென்னையில் முதல்வர் இல்லத்தின் முன் 1-06-1938 இல் இருந்து மறியல் தொடங்கப்பெறும் என்று எனது அறிக்கையில் வெளியிட்ட பின்னர், நான் சென்னை சென்று மறைந்த பெரியவர் சி டி நாயகம் அவர்களைச் சந்தித்து எனது நோக்கத்தைச் சொன்னேன். அவருடைய உதவியால் அவருக்குச் சொந்தமான இடத்தில் முதல்வர் இல்லத்திற்கு முன் இந்தி எதிர்ப்பு நிலையத்தை நிறுவி வரப்போகின்ற அறப்போர் வீரர்களின் வருகையை நோக்கி நானும் அருணகிரி அடிகளும், சண்முகானந்தா அடிகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இந்தி எதிர்ப்பு மறியல் 01-06-1938 தொடங்க இருக்கிறது என்று சொன்ன போதிலும் 25-05-1938 முதலே போராட்ட வாதிகள் வரத்தொடங்கிவிட்டனர்.

 120 பேர் கொண்ட போராட்டக்காரர்களுடன் திட்டமிட்டபடி இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது, மறியல் தொடக்கி மூன்றாம் நாள் அதாவது 60 இங்கும் மேற்பட்டோர் சிறை சென்ற பிறகு பெரியார். ஈ. வே. ராமசாமி அவர்கள் தாமதமாகவே அங்கு வந்தார். மறியல் செய்து கொண்டிருக்கும் தொண்டர்களை நோக்கி “இப்படி மறியல் செய்வது காங்கிரசார் மேற்கொள்ளும் பயன்தராத முறையாகும் – சண்டித்தனமாகும். இதில் நீங்கள் ஈடுபடத் தேவையில்லை” என்ற பழைய பல்லவியை மீண்டும் கூறியதோடு வந்தவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்கு செலவிற்கு பணம் தருவதாகவும் சொன்னார். அந்த சமயத்தில் அங்கிருந்தவர்களும் நானும் அவரை அனுகி “ஐயா இதில் நீங்கள் தலையிடாமல் இருப்பது, தமிழ் மொழியைக் காப்பாற்ற செய்யும் பேருதவியாக இருக்கும்” என்று சொல்லவே அவர் மறுமொழி கூறாமல் சி டி நாயகம் இல்லத்திற்குச் சென்றுவிட்டார்.

 இந்த நிலையில் இந்தி எதிர்ப்பைத் தோற்றுவித்த நானும் (பக்கம் 13), மற்ற இரு துறவிகளாக, அருணகிரி அடிகளும், சண்முகநாத அடிகளும் சிறைக்கு சென்று விடவே, அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததை உணர்ந்த பெரியார் தானே வந்து அதில் இணைத்து பாடிப்படியாக தானே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தோற்றுவித்ததாக நிலை மாற்றினார். இதன் விளைவு இந்தி எதிர்ப்பு போருக்கு பெரியார் ராமசாமி தான் முதல்வர் என்ற நிலையானது. வரலாற்றுண்மை வாய்ந்ததும் தன்னலமற்றதுமான இந்தி எதிர்ப்பு நிகழ்ச்சி பெரியார் ராமசாமியின் தலையீட்டால் “கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல் ஆகிவிட்டது” – ஈழத்து சிவானந்த அடிகள்

 இதுதான் பெரியார் ராமசாமியின் இந்தி எதிர்ப்பு லட்சணம் இதை லாபகமாக மூடி மறைத்து தன்னால் 1938 இல் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி தொடங்கப்பட்டதாகக் காட்டிக்கொண்டது திராவிட துரோகம் தொடர்கிறது. பிறகு…

1939 இல் “இந்தி எதிர்ப்பு தீவிரக்கிளர்ச்சி தற்கால சாந்தியாகச் சிறிது நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது” என்றார் தனது அறிக்கையில் பெரியார். இதை அறிந்த செய்தியாளர் கட்டாய இந்தி நீக்கத்திற்கு முன்னதாகவே தங்களது போராட்டத்தை நீங்கள் நிறுத்திக்கொண்டதன் உள்நோக்கம் என்ன ? என்ற கேள்வியை  கேட்க…

 “நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி, காங்கிரசு மந்திரிகளுக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காகவே நான் அதுபோல் பயன்படுத்திக்கொண்டேனேயொழிய, உண்மையில் எனக்கு இந்தி கட்டாயமாக்கப்படுவது பற்றியோ, அதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது பற்றியோ ஒரு கவலையும் இல்லை” (இந்தி எதிர்ப்பு – அன்றும் இன்றும் பக்கம் 30).

 இதுதான் பெரியார் ராமசாமியின் இந்தி எதிர்ப்பு லட்சணம், இதை அவரே ஒத்துக்கொண்ட பிறகும் அதை மூடி மறைத்து ஒட்டுமொத்த இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியும் பெரியாரில் இருந்தே தொடங்கியது போலச் சொல்லும் திருமாவேலனின் நடுநிலை என்னவோ?

 பெரியார் எல்லைப் போராட்ட வீரரா?

 அவர் எப்படி இந்தி எதிர்ப்பு போராட்டவாதி இல்லையோ அதே போல எல்லை போராட்ட வாதியும் இல்லை. இதற்கான ஆதாரத்தை அவரே சொல்கிறார்.

 “நான் விஸ்தீரணத்துக்காகப் போராடுபவன் அல்லன். விடுதலைக்காகப் போராடுபவன்” பெரியார் ராமசாமி. சரி நில விஸ்தீரணம் வேண்டாம். என்ன விடுதலை ? யாருக்கான விடுதலைக்காகப் போராடுகின்றீர் ? நில விஸ்தீரணங்களை அண்டை மாநில மக்களுக்குக் கொடுத்துவிட்டு விடுதலைப் பெற்ற மக்களை ஆகாயத்திலா தங்க வைப்பீர் பகுத்தறிவு பகலவரே ? இதுதான் உங்கள் பகுத்தறிவா ?

 பெரியார் கேட்டது இந்திய எல்லைக்கு உட்பட்ட மொழிவாரி மாகாணம் அல்ல. சுதந்திரத் தமிழ்நாடு. அப்படியெனில் விடுதலைப் பெற்ற தமிழர்களை எந்த நிலத்தில் தங்கவைத்து ? ராஜாஜி ஆட்சியில் (1938) இந்தி திணிக்கப்பட்டபோது, ‘‘தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தைக் கையில் எடுத்த பெரியார் எனில். அடுத்த ஆண்டே இதனை, ‘‘திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாற்றக் காரணம் என்ன ? இது யாரை ஏமாற்றச் செய்தார் ?.

 பெரியார் கேட்டது இந்திய எல்லைக்கு உட்பட்ட ஒரு மாகாணம் அல்ல… என்று சொன்ன திருமாவேலன் அடுத்த வரிகளில் ‘திராவிடர்களுடைய கலை நாகரீகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றம் அடைந்து பாதுகாக்கப்படுவதற்கு சென்னை மாகாணம் இந்தியா மந்திரியின் மேற்பார்வையின் கீழ் தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. என்று எழுதியுள்ளார். இதைப்படிக்கும் போது பெரியார் அப்படிப் போராடி இருந்தால் பெரியார் சித்த சுவாதீனம் உள்ளவரா என்று கேட்க தோன்றும். இந்திய எல்லைக்குள் உட்படாத ஒரு நாட்டை இந்திய மந்திரி மார்களின் முன்னிலையில் எதற்காகப் பிரிக்கவேண்டும் ? போராடித்தானே பெற்றிருக்கவேண்டும் ? அதை ஏன் செய்யவில்லை பெரியார் ?

 நில விஸ்தீரணத்திற்குப் போராடாத பெரியார் ராமசாமி, மொழிவாரி மாநில பிரிப்பில் உயர் பொறுப்பில் இருந்த கே.எம். பனிக்கரை எதற்காகச் சந்தித்தார் ?.  பனிக்கரின் சந்திப்பிற்குப் பிறகு பெரியார் ராமசாமி செய்தியாளர்களை சந்திக்கும்போது “பனிக்கருடனான சந்திப்பின் போது இடுக்கி, தேவிகுளம் பீர்மேடு போன்ற பகுதிகள் மலையாளிகளுடையது என்று கோரினார், நானும் சம்மதித்தேன்” என்றார் பெரியார். இவர் என்ன மாநில முதல்வரா ? மந்திரியா சம்மதிக்க ? ஆனால் இவர்கள் சந்திப்பில் பேசப்பட்டது வேறு.

 மொழிவாரி மாநிலப்பிரிப்பில் இரண்டு அமல்மண்டுகள் கொண்டுவரப்பட்டது. ஒன்று “ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த மொழிபேசுபவருக்கு அதிக சொத்து இருக்கிறதோ, அந்தப் பகுதி அந்த மாநிலத்திற்குப் போய்விடும்” அந்தப் பகுதியை அந்த மாநிலத்தோடு இணைப்பது” இரண்டாவது ” எந்த மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கின்றார்களோ அந்தப் பகுதியை அந்த மொழியின் மாநிலமாகப் பிரிப்பது”

 இந்த இரண்டு அமல்மெண்டுகளில் ஒன்று ஒன்றாகச் செயல்படுத்தப்பட்டது. முதலில் சொத்துமதிப்பு எந்த மாநிலத்தவருக்கு அதிகம் உள்ளதோ என்ற கணக்கீட்டின் அடிப்படையில் கேரளாவோடு நாம் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கியை இழந்தோம். பிறகு எம். பனிக்கர் அமெல்மென்டை மாற்றினார். “மக்கள் பேசும் மொழி கணக்கில் எடுக்கப்பட்டது”, இதில் திராவிட தளகர்த்தர்களில் ஒருவனான பாப்பிரெட்டி அரசன் இரவோடு இரவாகத் தமிழகத்தின் ஊர்களின் தமிழ் பெயரைத் தெலுங்கில் மாற்றி பொய்கணக்கு கொடுத்து, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளை நாம் இழந்தோம். இதேபோல கோலார், குடகு உள்ளிட்ட பகுதிகளையும் நாம் இழந்தோம். இந்த இரண்டு அமல்மென்டையும் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தும் படியும், ஒவ்வொரு அமல்மெண்டிலும் ஒவ்வொரு மாநில எல்லையாகப் பிரித்தெடுக்க எம். பனிக்கரிடம் பெரியார்தான் சொல்லி இருக்கிறார் என்பதை எம்.பனிக்கர் “தி ஹிஸ்டரி சக்ஸஸ்” என்ற தனது தன்வரலாற்று நூலில் தெளிவாக எழுதி இருக்கிறார். இதுதான் பெரியார் எல்லை போராட்டத்தில் நடந்து கொண்ட லட்சணம். எனது போராட்டங்களை நாம் அமைதியாக்குகிறேன், நீ இந்த இந்தப் பகுதிகளை இப்படியெல்லாம் எடுத்துக்கொள் என்று எம். பனிக்கருக்கு புத்தி சொல்லி நமது முதுகில் குத்திய ஆசாமி இந்த ஈரோட்டுப் பெரியார்.

 வெள்ளைக்காரர்களின் இடம், வனத்துறைக்கு சொந்தமாட இடம் எல்லாவற்றையும் மலையாளிகளின் இடமாகக் காட்டி நம்மிடம் இருந்து முல்லைப்பெரியாறு பகுதியான தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி இவைகளை மலையாளிகளிடம் கொடுக்கவும், முதல் அமல்மென்டின் படி நமக்கு வரவேண்டிய கூர்க்கு, கோலார், பெங்களூர், திருப்பதி, சித்தூர் என எல்லாவற்றையும் நமக்குக் கிடைக்காமல் அமெல்மென்டை மாற்றி நம்மிடம் இருந்து பறிக்க எம். பனிக்கரோடு சாதி திட்டம் தீட்டியவர் இந்த ஈரோட்டு ராமசாமி என்பதே வரலாற்று உண்மை.

 அடைந்தால் பூரண சுதந்திர தமிழ்நாடு என்று கூறியவர் பெரியார் என்றும் அதனால் அவர் நில விசித்தரிப்புக்கு போராடவில்லை என்று சொல்லும் கனவான்களுக்காக ? அவர் தனித்தமிழ் நாட்டுக்காக என்ன போராட்டம் செய்தார் ? என்ன மாதிரியான போராட்டத்தை செய்தார் என்று சிறிது விளக்கினால் நலமாக இருக்கும். சரி இவரால் அதற்காகப் போராடவில்லை என்றால் அந்தக் காலகட்டத்தில் தனித்தமிழ் நாடு வேண்டிப் போராடிய தோழர் தமிழரசன் மற்றும் புலவர் கு. கலியபெருமாள் இவர்கள் முன்னெடுத்த தனித்தமிழ் நாடு போராட்டங்களில் பெரியாரின் பங்கு என்ன ?

 தோழர் தமிழரசன் சாருமஜூந்தார் அவர்களை அழைத்துவந்து கூட்டம் நடத்தி விவசாயிகளின் பக்கம் நின்று எளியவர்களுக்கான புரட்சியை செய்தபோது பெரியார் ஏன் அமைதிகாத்தார் தெரியுமா ? அங்கே பாதிக்கப்பட்ட அனைவரும் நிலஉடமைகளாக இருந்த நாயக்கர்கள் என்பதனால் அமைதியாக இருந்தார். இதைப்போன்ற பார்வைதான் பெரியாருக்குப் புலவர். கு. கலியபெருமாள் மீதும். “தமிழ்நாடு தமிழருக்கே ” என்று முழங்கிய பெரியார் ஓராண்டிற்குள்ளாகவே “திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாறக் காரணமும் இந்த இனப்பாசம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நாம நமது நிலங்களைப் பலிகொடுத்ததற்கு காரணம் காமராஜரின் தேசிய உணர்வைவிட முக்கிய காரணம் ராமசாமியின் உள்நோக்கமே என்பதுதான் உண்மையிலும் உண்மை.

periyar-rajaji

 பெரியார் சாதியை ஒழித்தாரா ?

 பெரியார் சாதியை ஒழித்தார் என்றால் எப்படி ஒழித்தார் ? எந்தச் சாதியை ஒழித்தார் ? என்ற கேள்விக்கு பதிலையும் பெரியாரை சாதிஒழிப்பு போராளியாக சொல்பர்கள் பதில் சொல்லவேண்டும். சாதியை இந்த மண்ணில் விதைத்தவன் ஆரியன் என்றால், அதை அருமையாக வளர்த்து தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றுமையை இன்றுவரை குலைத்தது இந்தப் பெரியாரும் அவர் முன்மொழிந்த திராவிடமும்தான். சாதி ஒழிப்பு என்பது இரண்டு சாதிகளை ஒரே மட்டத்தில் அமர்த்தி அவர்களுக்கான ஒரு பொதுமை பண்பை முன்மொழிந்து அவர்களை ஒன்றாக்குவது சாதி ஒழிப்பா ? இல்லை இரண்டு சாதிகளில் ஒரு சாதியின் பக்கம் இன்று ஒரு சாதியின் மீது வன்மம் விதைத்து இருவரையும் எப்போதும் மோதல் நிலையில் வைத்து இருப்பது சாதி ஒழிப்பா ? இரண்டாவது தான் ஈரோட்டு ராமசாமி கையாண்ட சாதி ஒழிப்பு. இப்படித்தான் சாதி ஒழிக்க முடியுமா ?

மதுரை மீனாச்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று கோவில் நுழையும் போராட்டம் நடத்திய முத்துராமலிங்க தேவரைச் சாதிவெறியராக காட்டிக்கொண்டு, கேரளத்தில் வைக்கம் என்ற ஊரில் நடந்த போராட்டத்தை காரணம் காட்டி தன்னைச் சாதி ஒழிப்பு போராளியாக கட்டமைத்தவர் இந்தப் பெரியார். ராஜிவ்காந்தி படுகொலையின் போது டெல்லியில் இருந்து எப்படி இந்தப் படுகொலைக்கு காரணம் விடுதலைப்புலிகள் தான் என்று சுப்ரமணிய சாமி அறிக்கைவிட்டாரோ. அவருக்குச் சற்றும் குறைந்தவர் இல்லை இந்த ராமசாமி. முதுகுளத்தூர் கலவரத்தின் போது இமானுவேல் சேகரன் கொலைக்கு காரணம் முத்தராமலிங்க தேவர்தான் என்று அறிக்கைவிட்டவர் இந்தப் பெரியார் ராமசாமி. இதில் என்ன கொடுமை என்றால் இந்த நிகழ்விற்கு ஆறுமாதத்திற்கு முன்னால்தான் பெரியார் ராமசாமி முத்துராமலிங்க தேவரை பற்றிப் புகழ்ந்து கடிதம் பக்கம் பக்கமாக எழுதி இருந்தார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த வழக்கில் முத்துராமலிங்க தேவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் காங்கிரசின் உட்கட்சி பூசலினால்தான் இந்தக் கொலை நடந்தது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பெரியார் வாய்திறக்க வில்லை என்பது குறிப்பிட தக்கது.

எங்கையோ இருந்த வைக்கம் சென்று போராடிய இந்தச் சாதி ஒழிப்பு போராளி, அவர் வாழ்ந்த காலத்திலேயே நடந்த சிக்கலில் ஒன்றான குறிஞ்சாக்குளம் பற்றி எந்தப் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாதவர்கள் இந்தச் சாதி ஒழிப்பு போராளிகள் என்பது குறிப்பிட தக்கது. 1969 கலீல் இருந்தே சாதிப்பிரச்னையாக புகையத் தொடங்கிய இந்த நிகழ்வு பற்றி பெரியாரிடம் எந்தக் கருத்தும் இல்லை. 1991 களில் நடந்த படுகொலையின் போதும், படுகொலைக்குப் பின்னரும் இந்த பெரியாரிய பக்தர்களின் சாதி ஒழிப்பு அந்த மண்ணில் கால்வைக்கவே இல்லை என்பது திராவிட நாயக்கர்களின் இனப்பாசம் என்பது வரலாறு.

 பெரியார் மட்டும் இல்லை என்றால் “தமிழர்கள் தேவிடியா மகன்களாக இருப்பார்கள்” என்பவர்களை நினைத்தால் சற்று நகைப்பாக வரும். ஆரிய பிராமணர்களை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் அவர்கள் சொல்லும் கேவலமான சாத்திரங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி தமிழர்களை தேவடியாள் மகன்கள் என்றும் அதைப் பெரியார்தான் நீக்கினார் என்பதும் ஆகச்சிறந்த கேலிக்கூத்து. கடவும் மறுப்பில் ராமனை மறுதலிக்கும் இவர்கள் ராவண லீலா நடத்துவது எத்தகைய கேலிக்கூத்தோ அத்தகையதுதான் இதுவும்.

கடவுள் மறுப்பு சித்தாந்தத்தை எதற்காகப் பெரியார் முன்மொழிந்தார் ? பெரியார் முன்மொழிந்ததுதான் முதல் கடவுள் மறுப்பா ? என்றால் இல்லை எனலாம். தமிழர் வழிபாட்டு முறைகளில் ஆரியர்களின் மூட நம்பிக்கைகள் கலந்து விட்டதால் கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுத்தார் பெரியார் என்பார்கள். அப்படி என்றால் தமிழர் வழிபாட்டு முறைகளில் கலந்து இருக்கும் ஆரிய மூடநம்பிக்கைகளை மட்டுமே நீக்கியிருக்கவேண்டுமே வேண்டுமே தவிர, தமிழர்களுக்கு என்று ஒரு கடவுள் இல்லை, தமிழர்களின் தொன்ம அடையாளங்கள் எதுவும் இல்லை என்று சொன்னது எவ்வளவுப்பெரிய மோசடி ? கையில் அடிப்பட்டதற்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யும் பகுத்தறிவே பெரியாருடையது என்பதை உணரலாம்.

 ஆனால் “கடவுள் இல்லவே இல்லை” என்று சொன்ன பெரியாருக்கு ஒரு உள்நோக்கம் இருந்தது. தமிழரின் வழிபாட்டு முறையில் ஆரியம் கலந்தால் தமிழர்களும் ஆரியர்களும் ஒன்றாகக் கலந்து விடுவார்கள், அதனால் இந்த மண்ணில் இருக்கும் விசயநகர வாரிசுகள் தனித்து விடப்பட்டு அடையாளம் காணப்பட்டு விரட்டியடிக்கப் பட்டுவிடுவார்களோ என்ற பயம் பெரியாருக்கு இருந்தது. அதனாலே கடவுள் இல்லை என்பதன் மூலம் தமிழர்களை தன்வயப்படுத்தி விட்டு பார்ப்பனர்களை தனிமைப்படுத்தி விடலாம் என்ற எண்ணம் இருந்தது பெரியாருக்கு. அதுதான் பெரியாறு கடவுள் மறுப்பு கொள்கையின் ரகசியம்.

 தமிழர்களின் ஐந்திணை ஒழுகலாற்றில் உள்ள முதன்மை தெய்வங்கள், அந்த ஒழுகலாற்றின் ஒட்டுமொத்த கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்க கூடியது என்பதைப் பெரியார் அறிந்து இருந்தார். அதனால் ஆரியத்தோடும் திராவிடத்தோடும் கலக்காமல் தமிழர் வழிபாட்டுமுறை தனித்தன்மை பெற்றுவிடும் என்ற பயம் பெரியாருக்கு இருந்தது. தமிழர்களின் பண்பாட்டியலின் மூலம் அவர்களின் ஐந்திணை கடவுள்கள் எனவே “கடவுள் இல்லை” என்பதன் மூலம் தமிழனின் தனித்தன்மை அழிக்கப்பட்டு ஒரு கலாச்சாரமற்ற ஒரு இனமாக மாறினால்தான் தெலுங்கர் இங்கே வாழமுடியும் என்பதை உணர்த்ததன் வெளிப்பாடே பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை. ஆனால் பெரியாரின் பேச்சைக்கேட்டு பூசாரிகள் கோவிலில் இருந்து துரத்தப்பட்டு அந்த இடத்தைப் பார்ப்பனர்கள் பிடித்துக்கொண்டதுதான் இங்கே நடந்தது.

 சமூக நீதிக்காவலர் பெரியார் என்று சொல்பவர்கள் வரிசையாக வரவும், அவர் எந்தச் சமூகத்தின் நீதிக்குப் போராடினார் என்பதை எமக்குச் சொல்லவும். கீழ்வெண்மணி தொழிலார்கள் படுகொலைக்கு யார்காரணம் என்றும் அதற்கு பெரியார் சொன்ன விளக்கமும் படித்தால் பெரியாரின் சமூக நீதி எத்தகையது என்று அறியக்கூடும். அந்த இடத்தில் தனது இனத்தின் சமூக நீதியைக் காத்து நின்றவர் என அறியலாம்.

 உலகின் முதல் மூத்த மொழி தமிழ் மொழி, மூன்று சங்கங்களை கடந்து, ஆண்டுகள் பல ஆனாலும் அழகுகுறையாமல் இன்றளவும் செழுமை குறையாமல் இருக்கின்ற மொழி தமிழ் மொழி. இலக்கண செழுமை, இலக்கிய செறிவு கொண்ட இந்தத் தமிழ் மொழியை “காட்டுமிராண்டிகள் மொழி” என்று எதற்காகச் சொன்னார் ? அதிலும் அவருக்கு உள்நோக்கம் இருந்தது. தமிழர்கள் தொடர்ந்து தமிழைப் படித்தால், அதன் செழுமையை உணர்ந்தால் தமிழர்களுக்கு இனப்பாசம் இருக்கும். தமிழை அவர்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களை ஒரு கலப்பின் மக்களாக மாற்றுவது இயலாத காரியம் என்பதை உணர்ந்து, விசயநகர வாரிசுகள் இந்த மண்ணில் வேறுபாடு இன்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் தமிழர்களின் மொழியைச் சிதைக்கவேண்டிய, அதும் தமிழர்களை வைத்தே தமிழை சிதைக்கவேண்டிய அவசியம் பெரியாருக்கு இருந்தது. அதனால்தான் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் பெரியார் சொன்னது விசயநகர வாரிசுகளுக்காகவே என்பதுதான் உண்மையிலும் உண்மை.

“கடவுள் இல்லை” என்று பெரியார் சொன்னதற்கும், “தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்று பெரியார் சொன்னதற்கும் காரணம் பகுத்தறிவு அல்ல, தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை, தொன்மக்கூறுகளை தமிழர்களை வைத்தே அழித்து அதன் மூலம் விசயநகர வாரிசுகள் இங்கே மகிச்சியாக வாழ ஒரு கலப்பின கூறுகளை உருவாக்க நினைத்ததே காரணம். இதுதான் ஈரோட்டு ராமசாமியின் உள்நோக்கம்.

 இன்னும் இவரிடம் கேட்க நிறைய இருக்கின்றது. ஆனால் ஒவ்வொன்றிலும் இந்த ராமசாமியால் திட்டமிட்டு ஏமாற்றப் பட்ட ஒரு இனத்திற்குச் சொத்தைக்காரன் என்று வெறுப்புணர்வு அதிகமாகிறது. பெரியாரின் பெண்ணிய விடுதலை பற்றி இங்கே நான் பேச விரும்பவில்லை. ஏன்னெனில் அது மிகுந்த அருவருப்பானது. தனது 19 வயதில் 13 வயதுடைய நாகம்மையை மணந்து கொண்டதும், அதனால் பிறந்த குழந்தை 5 மாதத்தில் இறந்து போனதும் பெரியாரின் அறியாத வயதில் நடந்தது. அதை விமர்சிக்கவோ அல்லது பேசவோ தேவையில்லை. ஆனால் தானே வளர்த்த மக்களைத் தனது தள்ளாத வயதில் திருமணம் செய்துகொண்டதும், பெண்ணடிமை நீங்கப் பெண்கள் தங்களது கர்ப்பப்பையினை நீக்கிக்கொள்ள வேண்டும் என்று முழங்கிவிட்டு, தனது சொத்துக்களை பாதுகாக்க வாரிசு வேண்டும் என்று தள்ளாத வையத்தில் இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதும் பெண்ணடிமை நீக்கத்தில் பெரியார் கண்ட வழிகள் எனில் அதைப் பற்றி இங்கே பேசப்போவதில்லை.

திருமணக்கோலத்தில் பெரியார்

தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சி திராவிட சித்தாந்த கூடாரங்களை, அதை வைத்துப் பிழைத்துக்கொண்டு இருக்கும் விசயநகர வாரிசுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் ஓலங்களின் உச்சமே ஐயா திருமாவேலனின் கட்டுரை. பெரியார் என்பவர் தனது இனத்தினை காப்பாற்றவே தனது இறுதிக்காலம் வரை போராடினார். தமிழினத்திற்கு எதிராகவே கடைசிவரை நடந்துகொண்டார் என்பதில் இருவேறு கருத்தில்லை. இதை இங்கே எழுதிய நோக்கம் பெரியாரிய வாரிசுகளுக்கு உண்மையைச் சொல்லி அவர்களை தெளிவுபெற வைக்கவேண்டும் என்பதல்ல… ஆனால் ஆதாரமற்று ஓடிவந்து பெரியார் அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று எண்போன்ற பிள்ளைகளிடம் பேசாது இருப்பதே நல்லது என்பதை அவர்களுக்கு உணர்த்தவே. ஈரோட்டு ராமசாமியும், தமிழ் இனத்திற்கு எதிரான துரோகமும் வெவ்வேறானது அல்ல… இரண்டும் ஒன்றுதான்.

(தனிமனித தாக்குதலை விட்டுவிட்டு – கருத்தியல் விவாதத்திற்கு வரவும் )

செந்தில்நாதன் சேகுவேரா

2 thoughts on “ஈரோட்டு ராமசாமியும், தமிழினத் துரோகமும் வெவ்வேறல்ல…!

 • 21/09/2017 at 1:58 PM
  Permalink

  first of all, I would like to thank செந்தில்நாதன் சேகுவேரா for this excellent article with lots evidences. Actully I wanted to type in Thamizh but i dont know how to type. Earlier,
  I had earlier a few doubts about EVR and now I got the clarity. This article has changed my view. However, this article must be published and has to reach each and every thamizh youth.

  Good luck!

  Reply
 • 17/09/2017 at 9:07 PM
  Permalink

  இவன் ஈரோடு அல்ல கன்னடம்…

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *