ஐநாவில் மையம்கொண்டுள்ள நாம்தமிழர் கட்சியின் மனித உரிமை குழுவினர்

ஐநாவில் மையம்கொண்டுள்ள நாம்தமிழர் கட்சியின் மனித உரிமை குழுவினர்

நேற்றுமுதல் சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை 34 வது மனித உரிமை கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நாம்தமிழர் கட்சியின் சார்பாக 11 இங்கும் மேற்பட்ட களதளபதிகள் ஜெனிவா சென்றுள்ளனர். அவர்கள் அடுத்துவரும் 8 நாட்களும் ஜெனிவாவின் ஐநா சபையின் மனித உரிமை அமர்வில் கலந்து கொண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் அந்தசமயத்தில் மீறப்பட்ட மனித உரிமைகள் போன்ற செய்திகளை ஐநா மன்றத்தில் எடுத்துவைக்க இருக்கின்றார்கள்.

இந்த கூட்டத்தில்…

1. முனைவர் . பால்நியூமன் ( சர்வதேச தொடர்பாளர்)
2. இயக்குனர். செகதீச பாண்டியன், (இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்)
3. வழக்கறிஞர் ராஜிவ்காந்தி (இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் )
4. ஐயா.பொன் சந்திரன்
5. இயக்குனர். வெற்றிமாறன்,
6. முனைவர். சுபாசு சந்திரா  
7. திரு. புகழேந்தி மாறன் (தென்சென்னை மாவட்ட செயலாளர்) ,
8. இயக்குனர். ஆர். கே. செல்வமணி,
9. முனைவர்.செல்வன் அருள்நாதன்
10. பொறியாளர். இங்கர்சால் செல்வராஜ் (நார்வே தொடர்பாளர்)
11. பொறியாளர் சுமேஷ்குமார் (டென்மார்க் தொடர்பாளர்) ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

இந்த கூட்டத் தொடரின் முக்கிய அங்கமாக தமிழ் இனப்படுகொலைக்கான நீதியோடு சேர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அரசுத்தரப்பில் மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள் உட்பட தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சி மனிதஉரிமை மீறல்களை விவாதிப்பதற்காக பொறியாளர்கள், சட்டவல்லுனர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மக்கள் மன்ற போராளிகள் என்ற ஒரு பெரிய 11 பேர்கொண்ட குழுவையே ஜெனிவாவிற்கு அனுப்பி உலக நீதிமன்றத்தில் மனித உரிமை மீறலுக்கான நீதியை கோரி நிற்பது இதுவே முதன்முறையாகும் என்பதில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *