ஒரு கண்ணீர் கடிதம்…!

ஒரு கண்ணீர் கடிதம்…!

image

நாள்: 30-07-2016

அனுப்புனர்:
அபுதாபியில் சிக்கலில் சிக்கித்தவிக்கும் 15தமிழர்கள்

பெறுநர்:
மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள்,
புதுடெல்லி, இந்தியா

பொருள்:
அமீரகம் (அபுதாபியில்) தாயகம் திரும்பமுடியாமல் தவிக்கும் 15 தமிழர்களை மீட்கக்கோரி

மாண்புமிகு அம்மா அவர்கள்,
நாங்கள் அபுதாபியில்,
EMGUARD ELECTRO MECHANICAL & GEN.CONT.LLC என்ற நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு வந்தோம். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் மாதத்திற்கு பிறகு ஊதியம் கொடுக்கட்படவில்லை. மேலும் எங்கள் ஒப்பந்த தேதி முடிந்தும் (2016ஜனவரி மாதத்திலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக) தாயகம் அனுப்பப்படாமல் இருக்கிறோம்.

இது குறித்து பல மாதங்களாக எங்கள் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தகுந்த பதில் இதுவரை கிடைக்கவில்லை. சம்பளம் இல்லாமல் சிரமத்தில் இருக்கும் நாங்களும் எங்களால் ஆன முயற்சிகள் அனைத்தையும் எடுத்துவிட்டோம். இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. எங்களிடம் நீதிமன்றம் வாயிலாக அணுகுவதற்கு போதிய பணம் இல்லை, நிறுவனத்தில் அழுத்தம் கொடுக்கும் நேரங்களில், காவல்துறையைச் சேர்ந்த சிலர் வந்து, எங்களில் மூன்று அல்லது நான்கு ஊழியர்களை அழைத்துச்சென்று வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும் இந்த சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி கூறி வருகின்றனர். ஆனால் இன்றுவரை எந்த சிக்கல்களும் தீரவில்லை என்பது மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. இது மாதிரியான நிகழ்வுகள் பலமுறை நடந்திருகின்றது.
இப் நீதிமன்றததின் வாயிலாக முன்னெடுக்க முயன்றபோது நீதிமன்றத்தில் இருந்து எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அத்துறையைச் சார்ந்த சில அதிகாரிகள் எங்களிடம் நேரடியாக கருத்து கேட்க்க வருவதாகக் கூறினர்.
அதன்படி அன்று நள்ளிரவு சுமார் 12:00 மணியளவில் இரண்டு அரபு மொழி பேசும் நபர்கள் தங்களை Labour Court ன் பிரதிநிதிகள் என்று சுய அறிமுகம் செய்து கொண்டு எங்கள் நிறுவன மேலாளருடன் குடியிறுப்புப் பகுதிக்குள் வந்தனர். அன்று அதிகாலை சுமார் 3:00 மணியளவில் எங்கள் நிறுவனம் (BLACK LIST) ல் இருப்பதாகக் கூறி, அமீரக அரசு எங்கள் நிறுவனத்துடன் கலந்துரையாடி 3,000 திர்ஹாம்களை மட்டும் எங்களுக்கு பட்டுவாடா செய்வதுடன், தாயகம் திரும்ப பயணசீட்டு கொடுத்து கடந்த ரமலான் பெருநாளுக்கு முன்பாக அனுப்புவதாக சொன்னார்கள். ஆகையால் தாயகம் திரும்பப் போகும் மகிழ்ச்சியில் அனைத்து ஊழியர்களும் அதனை ஒப்புக்கொண்டோம்.
ரமலான் முடிந்து இத்னை நாட்க்கள் ஆகியும் இதுவரை ஊழியர்களுக்கான ஒரு முன்னெடுப்பும் நடை பெறாததால், மீண்டும் அனைத்து ஊழியர்களும் ஒன்று கூடி நிறுவனத்திடம் முறையிட்டோம்.
அன்றிரவு மீண்டும் ஒரு அரபு மொழியைப் பேசும் ஒரு நபர் தன்னை நீதிமன்ற உயர் அதிகாரி என்று தன்னை சுய அறிமுகம் செய்துக்கொண்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகுதான் எங்களை தாயகம் அனுப்ப முடியும் என்று அறிவித்தார். ஏற்கனவே கடந்த ஏழு மாதங்களாக வறுமையில் வாடும் எங்கள் ஊழியர்கள் அதனை ஏற்க மறுத்தோம். பிறகு அந்த அதிகாரி நிறுவனத்திடம் கலந்து ஆலோசித்துவிட்டு
ஒருமாத ஊதியம் முன்பணமாக மூன்று நாட்க்களுக்குள் கொடுக்க நிறுவனம் ஒப்புக் கொண்டதாக கூறி விட்டு சென்றுவிட்டார்.
அதன் பிறகு ஐந்து நாட்கள் ஆகியும் அந்த பணம் கொடுக்கப்பட வில்லை. அன்று நாங்கள் சந்தித்த அதிகாரியும் இதுவரை வரவில்லை. நாங்கள் பிறகு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்க அழைத்தோம் அழைப்பை ஏற்க்க மறுத்தனர். இந்த நிலையில் மீண்டும் அனைத்து ஊழியர்களும் இணைந்து நிறுவன அதிகாரிகள் வரும்படி கேட்டோம் ஆனால் மீண்டும் காவல்துறையினர் வந்து எங்கள் பிரச்சினையை கேட்டு விட்டு 5 ஊழியர்களை காவல் நிலையம் வரும்படி கேட்டுக்கொண்டனர். ஊழியர்கள் மறுத்து விட்டோம். அன்று காவல்துறையுடன் சுமார் ஒரு மணி நேர வாதம் நடந்தது. நாங்கள் பலமுறை காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து எந்த பயனும் ஏற்படவில்லை. ஆகையால் உங்களுடன் வருவது வீண் என்ற கூறி செல்ல மறுத்தோம்.
இந்நிலையில் காவலர்கள் வற்புறுத்தி, வலுக்கட்டாயமாக ஆறு ஊழியர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அச்சமயம் மீண்டும் ஒரு அரபு மொழி பேசுபவர் தன்னை ஒரு நீதிமன்ற அதிகாரி என்று கூறி காவல் நிலையம் வந்தடைந்தார். அவர் காவலர்களிடம் நிறுவனம் சிக்கலான நிலையில் உள்ளது. ஆகையால் நிறுவனத்துடைய சிக்கல்கள் தீரும்வரை காத்திருக்கவும். மேலும் நிறுவனம் அனுப்பும் போது அனுப்பும் என்று கூறினார். நாங்கள் ஏதாவது ஒரு காலக்கெடுவைக் கேட்டோம். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லமுடியாது என்று கூறி விரைவாக கிளம்பிவிட்டார்.
நிறுவனத்தில் மொத்தம் 160 தொழிலாளர்கள் இருக்கிறோம்.
அதில் 15 தமிழர்களும் 50 மற்ற மாநிலத்தவரும் இருக்கின்றோம்.

இந்தியாவைச் சார்ந்தவர்கள் பலமுறை அமீரகத்தில் இயங்கிவரும் இந்திய தூதரகத்தில் அழைத்து பேசினோம். ஆனால் எந்த பலனும் இல்லை.
இந்தியாவில் உள்ள உறவினர்கள் டெல்லியில் உள்ள தூதரகத்தின் வாயிலாக வழக்கு பதிவு செய்தும் எந்தவிதமான நடவடிக்கையும் ஏற்படவில்லை.

இதே நிலையில் எங்களுடைய அத்தியாவசிய தேவைக்குக் கூட கையில் பணமில்லாத சிரமமான நிலையில்தான் இருக்கிறோம். நாங்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த எங்களது குடும்பமும் மிகவும் உணவுத் தட்டுப்பாட்டுக்கிடையில், வாடகை மற்றும் கடன் தொல்லையிலும் அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்திசெந்துகொள்ள முடியாத ஒரு அவல நிலைநில்தான் இருக்கின்றனர்.

இக்கடிதத்தின் வாயிலாக நாங்கள் கேட்டுக்கொள்வது,
எங்களது சிக்கலை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் நாங்கள் அனைவரும் தாயகம் திரும்ப உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தங்கள் உதவியைனாடும்
15தமிழர்கள்

(-தமிழ்மாறன் அமீரகம்)

One thought on “ஒரு கண்ணீர் கடிதம்…!

  • 25/08/2016 at 2:20 PM
    Permalink

    கண்ணீர் கதை நிறைவுக்கு வந்தது. ஒட்டுமொத்த தமிழர்களும் இன்று 25-08-2016 அதிகாலை 2 மணியளவில் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தனர். உதவிய உள்ளங்களுக்கு நன்றி.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *