சென்னை கொளத்தூரில் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்திய “தைப்பூசத் திருவிழா”

தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 04-01-2018 அன்று சென்னை கொளத்தூரில் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்பு பிரிவான “வீரத்தமிழர் முன்னணி” சார்பில் திருமுருகப் பெருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இதுவரை பொதுமக்கள் கண்டிராத புதிய தோற்றத்தில், பூணுல் இல்லாமலும், முறுக்கிய மீசை, மற்றும் இறுகிய உடலுடன் முருகன் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளித்தார்.

 

அம்முருகனைக் கண்டு முதலில் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர், பின் அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் விளக்கிக்கூறியதும், அவர்கள் அம்முருகனை ஏற்று வணங்கி சென்றதுடன், அம்முருகனை ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்து சென்றனர். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மதத்தை சேர்ந்த மக்களும் இதில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு பழக்கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அத்துடன் சைவ சமய சொற்பொழிவாளர் “வடிவுக்கரசி திருமலை” அவர்கள் தமிழர் இறையோன் பற்றியும், தமிழர் வாழ்வியல் முறைகள் பற்றியும், வள்ளலார் போதித்த நன்னெறிகள் பற்றியும் பொதுமக்களிடையே உரையாற்றினார்.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியினை நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் பா. மணிகண்டன் முன்னெடுத்து நடத்தினார்.

இதனையடுத்து மிகப்பிரமாண்டமான முறையில் வரும் 11-02-2018 அன்று திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணி தைப்பூசத் திருவிழாவை நடத்த இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *