தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து லண்டனில் வீரத்தமிழர் முன்னனி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி கடந்த 100 நாட்களாக அறவழியில் போராடிக்கொண்டிருந்தனர்,

இந்நிலையில், நேற்றும் இன்றும் தமிழக அரசின் உத்தரவை அடுத்து காவல்துறையினர் காட்டுமிராண்டி தனமாக அறவழியில் போராடிக்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர், இதில் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர், இன்னும் பலர் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனித நேயமற்ற முறையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்,

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து லண்டனில் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்பு பிரிவான வீரத்தமிழர் முன்னணி போராட்டம் நடத்தியது, லண்டன் நகர பொறுப்பாளர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *