நாம்தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் வெற்றி – சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து

விவசாயிகளின் கடும் எதிர்ப்பிற்கு இடையே சேலம் முதல் சென்னை வரை 8 வழி சாலை அமைக்கும் திட்டத்தை அரசு அமல்படுத்த தொடங்கியது, அதற்காக நிலங்களை கையகப்படுத்தும் வேலையை ஆரம்பித்தது.
இந்நிலையில் சென்னையில் முதல் சேலம் செல்ல 8வழி பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் வழக்கு தொடர்ந்தார், அதன்பின்னர் இந்த வழக்கில் பாமக, பூவுலகின் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கங்கள் என்று பல்வேறு தரப்பினர் இணைந்து கொண்டனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருவன,

சென்னை- சேலம் இடையே எட்டு வழிச்சாலை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த 8 வழிச்சாலை திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிய பின்னர் தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவதை ஏற்க முடியாது.இந்த 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தக் கூடாது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்தி இருந்தால்,அது செல்லாது.

சுற்றுச்சூழல் குறித்து போதிய முன் ஆலோசனை பெறாமல், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்

இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு அவசர கதியிலே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியால் தடை செய்யப்பட்ட பீட் பேக் இந்தியா என்ற நிறுவனம் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டது தவறு.

குறைந்த பட்சம் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் முறையாக ஆய்வு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் சுற்றுப்புறச்சூழல் அனுமதி வாங்கப்படவில்லை

வனவிலங்குகள் ஆய்வு மற்றும் வன ஆய்வு என எந்த ஒரு ஆய்வும் 8வழிச்சாலை திட்டத்துக்கு செய்யப்படவில்லை. இதேபோல் அரசின் எந்த ஒரு துறையிலும் முன் அனுமதி பெறப்படவில்லை

விவசாய நிலங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்திய காவல்துறையின் நடவடிக்கையை நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. மேலும் மரங்களை வெட்டவும் ஏற்கனவே இடைக்கால தடை விதித்து இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *