7 பேர் விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம்.

முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஆரம்பம் முதலே பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது, இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழும்பியும் இதுவரை அவர்கள் விசாரிக்கப்படவே இல்லை.

அந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன்,நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் போராடிவருகின்றனர், அதே கோரிக்கை க்காக நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள ஒன்றினைந்து மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் விரைவாக ஆளுநர் கையெழுத்து இடக்கோரியும், உடனடியாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *